தொகுப்பாளினி பிரியங்காவின் கணவர் எங்கே? பரபரப்பு ப்ரோமோவால் வெடித்த சர்ச்சை
தொகுப்பாளினி பிரியங்காவின் கணவர் இல்லாமல் வெளியாகி வைரலாகி வரும் ப்ரோமே சர்ச்சையை கிளப்பி வருகின்றது.
பிரியங்கா விஜேவாக பணியாற்ற துவங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை கொண்டாடும் வகையில் விஜய் டிவி சிறப்பு நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்தது.
அதில் இவரின் சிறந்த தருணங்கள் இடம்பெற்று இருந்தது. ஆனால் இவரது கணவரின் காட்சிகள் மட்டும் இல்லை.
பிரியங்கா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் டெக்னீசியனாக பணியாற்றிய பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு கணவர் குறித்து அடிக்கடி பேசி வந்த பிரியங்கா சமீப காலமாக அவர் குறித்த எந்த தகவலையும் வெளியிடவில்லை.
பிரியங்காவின் மிக முக்கிய நிகழ்ச்சியான இதில் இடம்பெற்ற காட்சி தொகுப்பில் அவரது கணவர் பிரவீன் குமார் இடம்பெறாமல் இருப்பது பல சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.