ரூ.12 லட்சத்துடன் பிக் பாஸ் வீட்டிலிருந்து அதிரடியாக வெளியேறிய ராஜூ? அதிர்ச்சியில் ரசிகர்கள்...தீயாய் பரவும் தகவல்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்து ரூ.12 லட்சத்துடன் ராஜூ வெளியேறியுள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றது.
பிக் பாஸ் வீட்டிற்குள் திடீரென சரத்குமார் நுழைந்த நிலையில், அவர் கையில் வெறும் ரூ. 3 லட்சம் மட்டுமே இருந்தது ரசிகர்களையும் உள்ளே இருந்த ஹவுஸ்மேட்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
எப்படியோ பணத்தை எடுக்காமல் இருந்தால் தொகை அதிகமாகும் அப்போது தூக்கிடலாம் என போட்டியாளர்கள் பக்கா பிளான் போட்டு விட்டனர்.

கடைசியாக ரூ. 10 லட்சம் மட்டுமே வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் ரூ. 12 லட்சம் வரை வந்ததாக தகவல்கள் கசிந்துள்ளன.
ஆனால், ரூ. 12 லட்சமே தனக்கு அதிகம் என பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் 7 பேரில் ஒருவர் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி அந்த பணத்தை எடுத்துக் கொண்டு ஒரே ஓட்டமாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது.
இன்னொரு பக்கம் மக்கள் சப்போர்ட் அதிகம் இருப்பதால் ராஜுவுக்கு பதிலாக இந்த சீசன் டைட்டிலை பிரியங்காவுக்கு கொடுக்க வேண்டும் என்பதற்காக ரூ. 12 லட்சம் பெட்டியுடன் ராஜுவை பிக் பாஸ் குழு வெளியேற்றி உள்ளதாகவும் வதந்திகள் கிளம்பி உள்ளன.
ராஜு நிச்சயம் அப்படி பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேற மாட்டார் அவருக்கு ரூ. 50 லட்சம் கிடைக்கப் போகுது என்பது தெரியும் என்றும் ராஜுவின் ஆர்மியினர் உறுதியாக நம்பி வருகின்றனர். பார்க்கலாம் இன்னும் ஓரிரு நாட்களின் உண்மை தெரிந்து விடும்.