விக்ரம் கொட்டத்தை அடக்கிய சாண்டரா.. பார்வதியிடம் மோதும் Fj- சூடுபிடிக்கும் பிக்பாஸ் வீடு
தன்னை கலாய்த்து பேசிய விக்ரமின் கொட்டத்தை ஒரே டாஸ்க்கில் சாண்ட்ரா அடக்கியுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 9
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை 8 போட்டியாளர்கள் வெளியேறியுள்ள நிலையில், உள்ளே 16 போட்டியாளர்கள் விளையாடி வருகிறார்கள்.
இந்த வாரம் 13 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். வீட்டின் தலைவராக இருக்கும் Fj பார்வதியை கலாய்த்து பேசி புது பிரச்சினையை கிளப்பி விடுகிறார்.

இந்த வார டாஸ்க்கில் கூறப்பட்டது போன்று மூன்று அணிகளாக பிரிந்து விளையாடிக் கொண்டிருக்கும் போட்டியாளர்கள் காமெடி, சண்டை, சமையல் மற்றும் விளையாட்டு என அனைத்தையும் கலந்து ரசிகர்களுக்காக கொடுத்து வருகிறார்கள்.
சாண்ட்ராவின் மாஸ்டர் பிளான் இதுவா?
இந்த நிலையில், இன்றைய தினம் சாண்ட்ரா அவருடைய ஜாக்கேட்டை அணியாமல் நின்றுக் கொண்டிருக்கிறார். இதனை கவனித்த விக்ரம் ஜாக்கேட் யாருடையது என கேட்க, அதற்கு பதில் கொடுத்த சாண்ட்ரா, “என்னுடைய தான் நீங்க ஏன் கேட்குறீங்க?” என்கிறார்.

வாக்குவாதம் இப்படியே முற்றி போக விக்ரம், சாண்ட்ரா நன்றாக உருட்டுவார் என கலாய்க்கும் வகையில் பேசுகிறார்.
இதற்கு சரியான பதிலடிக் கொடுக்க நினைத்த சாண்ட்ரா, வியானா இருவரும் விக்ரமிடம் தலைமுடி காய வைக்கும் இயந்திரத்தை கொடுத்து பாடல் பாடிக் கொண்டே, தலைமுடியை காய வைக்க வேண்டும் என்கிறார்கள்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளது. இதனை கவனித்த இணையவாசிகள், “விக்ரமிற்கு இது தேவையா?” எனக் கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |