இப்படியொரு மனசா? பரிசுத்தொகையை முத்துகுமரன் என்ன செய்ய போகிறார்? அவரே கூறிய பிளான்
பிக்பாஸ் சீசன் 8 டைட்டில் வின்னர் முத்துகுமரன் வெற்றிபெற்று வாங்கிய பணத்தை என்ன போகிறார் என்ற விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் 8
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சி தன்னுடைய எட்டு சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அந்த வகையில், நேற்றைய தினம் பிக்பாஸ் சீசன் 8 சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த சீசனிலில் டைட்டில் வின்னராக முத்துகுமரன் தெரிவு செய்யப்பட்டார்.
பிக்பாஸ் சீசன் 8-ல் நேற்றைய கிராண்ட் பினாலேவில் சௌந்தர்யா, முத்துக்குமரன் இருவரும் அருகருகே நின்றுகொண்டிருக்க முத்துக்குமரனின் கையை உயர்த்தியப்படி டைட்டில் வின்னர் இவர் தான் என விஜய் சேதுபதி அறிவித்தார்.
முத்துகுமரனின் கடைசி பிளான்
இந்த நிலையில், பிக்பாஸ் கோப்பையை முத்துகுமரன் மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டார்.
இதனை தொடர்ந்து உரையாற்றிய முத்துகுமரன், “இந்த கோப்பை எங்களின் 24 பேருக்கானது. என்னோட வெற்றியில்லை இது. எந்த ஏழ்மையிலும், வறுமையிலும், எந்த இருட்டான சூழல்நிலையிலும், தன்னம்பிக்கையையும், தன்மானத்தையும் விட்டுக்கொடுக்காத ஒரு பெண்ணின் வெற்றி. அந்த பெண் என் அம்மா.
அவர் எனக்கு சொல்லிக்கொடுத்தது தமிழ். மற்றொன்று உழைப்பு. யாராவது என்னால் இது முடியாது என்று கூறினால், முத்துக்குமரானாலே முடிந்தது உன்னால் ஏன் முடியாது என சொல்லுங்கள். என்னை பாராட்டி, விமர்சனம் செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்” என கண்ணீருடன் பேசியிருந்தார்.
அதன் பின்னர், பரிசுத்தொகையை கொண்டு கடன் இல்லாமல் வீடு கட்டுவேன் என்றும், சமூகத்திற்காக இந்தப் பணத்தை செலவு செய்வேன் என்றும் கூறியிருந்தார்.
இந்த காணொளி ரசிகர்களின் பலரின் கவனத்திற்கு சென்றுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |