யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் Good news சொன்ன டைட்டில் வின்னர்- குஷியில் குடும்பத்தினர்

DHUSHI
Report this article
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் அர்ச்சனா குட் நியூஸை ஒன்றை அவரது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
பிக்பாஸ்
பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் ஓடக் கூடிய நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சி தமிழ் மட்டுமல்லாது மலையாளம், கன்னடம்,தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் ஒளிபரப்பாகி வெற்றிநடைபோட்டு வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரையில் ஏழு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்துள்ளன. ஏழு சீசன்களையும் உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கினார்.
டைட்டில் வின்னர்
மேலும், தொலைக்காட்சியை தாண்டி கூடுதலாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் “பிக்பாஸ் அல்டிமேட்” என்ற பெயரில் ஒளிபரப்பானது.
இந்த நிலையில்,ஏழாவது சீசனில் மற்ற சீசன்களை விட அதிரடியான எக்ஷன்கள் அதிகமாகவே இருந்தது.
இதனால் சமூக வலைத்தளங்களில் அதிகமாக விமர்சிக்கப்பட்டது. அதிலும் பல போராட்டங்களுக்கு மத்தியில் சீரியல் நடிகை அர்ச்சனா டைட்டில் வின்னராக 19 கோடி மக்களால் வாக்களிக்கப்பட்டு தெரிவு செய்யப்பட்டார்.
குட் நியூஸிற்கு குவியும் வாழ்த்துக்கள்
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அர்ச்சனா தற்போது என்ன செய்கிறார் என்ற விவரங்களை அவரது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வது வழக்கம்.
அந்த வகையில், குடும்பத்தினருடன் சென்று புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
அத்துடன் தனது குடும்பத்தினரை அதில் வைத்து கொண்டு ரைட் ஒன்றும் செல்கிறார்.
இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், அர்ச்சனா ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
