பிக்பாஸ் வீட்டில் இன்று! அசீமின் பதிலால் கொந்தளிக்கும் மைனா.. நடந்தது என்ன?
பிக்பாஸ் வீட்டில் குழு வாரியான செயற்பாடுகள் ஆரம்பித்துள்ளதாக கமல் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
பிக் பாஸின் வளர்ச்சி
பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டு தற்போது ஆறாவது சீசன் சென்றுக் கொண்டிருக்கிறது.
இதிலிருந்து இந்த வாரம் வரை சுமார் ஏழு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கடந்த சீசன்களை விட இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டில் சண்டைகள் அதிகரித்துள்ளது, ஆனால் போட்டியாளர்களின் பங்களிப்பு குறைவாக காணப்படுகிறது.
குழுவாரியாக செயற்படும் போட்டியாளர்கள்
இதனை இந்த வாரம் கமல்ஹாசன் சுட்டிக் காட்டியுள்ளார். இதனால் குழுவாரியாக மைனாவும் மணியும் செயற்படுகிறார்கள் என அசீம் கமலிடம் கூற, இதனால் கோபமுற்ற மைனா அசீமின் கூற்று தவறானது என அழுத்தமாக கூறியிருக்கிறார்.
மேலும் அசீம் பிக் பாஸ் வீட்டின் வல்லவன் என்றும் கமல் கூறியிருக்கிறார். இதனால் சக போட்டியாளர்கள் அனைவரும் கோபமுற்றுள்ளனர்.
இனிவரும் காலங்களில் பிக் பாஸ் சீசன் 6 சூடுபிடிக்கும் எனவும் திருப்புமுனையுடன் அமையும் எனவும் ரசிகர்களாலும் கமலாலும் எதிர்பார்க்கப்படுகிறது.
பரபரப்பு ப்ரோமோ
அந்த வகையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்துகிறது.