விஜய் சேதுபதியின் மீசை இல்லாத லுக்... மோகன்லால் சொன்ன கமெண்ட் வைரல்!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் இன்று பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. இந்த சீசனையும் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.
சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரே நாளில் கோலாகலமாக தொடங்கியுள்ளது.

விஜய் சேதுபதியின் லுக்கை கவனித்த மோகன்லால்
பிக் பாஸ் நிகழ்ச்சிகள் தொடங்கியதை முன்னிட்டு, நான்கு மொழிகளைச் சேர்ந்த தொகுப்பாளர்களும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஒன்றாக கலந்துரையாடினர்.
அப்போது விஜய் சேதுபதி மீசை இல்லாமல் இருந்ததை கவனித்த மலையாள நடிகர் மோகன்லால், அவரது புதிய லுக்கை பாராட்டினார்.

“மீசை இல்லாமல் சூப்பராக இருக்கிறீங்க!” என மோகன்லால் கூற, அதற்கு விஜய் சேதுபதி, “சார், நாம ரெண்டு பேரும் பக்கத்து பக்கத்து பில்டிங்கில்தான் இருக்கிறோம்” என கலகலப்பாக பதிலளித்தார்.
இந்த உரையாடல் இரு நடிகர்களுக்கும் இடையிலான நகைச்சுவையான தருணமாக அமைந்தது. இதில் இன்னொரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியைப் போலவே மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பும் சென்னையில்தான் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |