பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்!
பிக் பாஸ் வீட்டில் இருந்து நடிகை லட்சுமி பிரியா வெளியேற்றப்பட்ட நிலையில், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் போட்டுள்ள பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் சீசன் 10
சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10வது சீசன், விஜய் தொலைக்காட்சியில் கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி பிரம்மாண்டமாகவும் பல அதிரடி திருப்பங்களுடனும் தொடங்கியது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் புதுமையான போட்டிகள், எதிர்பாராத சம்பவங்கள் மற்றும் போட்டியாளர்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகள் என பல்வேறு விஷயங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும்.
அந்த வகையில், 10வது சீசனின் தொடக்கத்திலேயே இதுவரை வந்த சீசன்களில் இல்லாத சில விஷயங்கள் இடம்பெற்றதால், இந்த சீசன் எப்படி செல்லப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதலே பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு இடையே சண்டை, கருத்து மோதல் என பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இதனால், வரும் நாட்களில் போட்டியாளர்களின் செயல்பாடுகள் மேலும் எந்த அளவுக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், கடந்த எபிசோடில் போட்டியாளர்களில் ஒருவரான மணிவண்ணன் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார். இந்த எலிமினேஷன் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக இருந்த நிலையில், தற்போது லட்சுமி ப்ரியா லீடருக்கான Exit Poll முடிவுகளின் அடிப்படையில் அவர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்.

வைரலாகும் லட்சுமி ப்ரியாவின் பதிவு
லட்சுமி ப்ரியா எலிமினேட் செய்யப்பட்ட செய்தி வெளியானதும் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தார். இந்த நிலையில் லட்சுமி ப்ரியாவிற்கு ஆதரவாக அனைவரும் பதிவு போட்டு வருகின்றனர்.
லட்சுமி ப்ரியாவுக்கு ஆதரவாக மக்கள் போடும் பதிவுகளை இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டு வருகிறார்கள். லட்சுமி ப்ரியா எலிமினேட் செய்யப்பட்டது Unfair என்று ரசிகர்கள் பலரும் தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றார்கள். குறித்த பதிவுகள் தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |