தடபுடலாக நடந்து முடிந்த பிரேம்ஜி திருமணம்.. சீதனம் குறித்து சர்ச்சையை கிளப்பிய பயில்வான் -பரபரப்பு பேச்சு!
பிரேம்ஜி திருமணத்தின் போது எவ்வளவு சீதனம் வாங்கினார் என்பது குறித்து பரபரப்பு பேச்சாளர் பயில்வான் பேசியுள்ளார்.
பிரேம்ஜி - இந்து திருமணம்
தமிழ் சினிமாவில் தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் பிரபலமானவர் தான் நடிகர் பிரேம்ஜி அமரன்.
இவர் கடந்த ஜூன் 9ம் தேதி திருத்தணியில் இந்து என்கிற பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார்.
எளிமையான முறையில் திருமணம் நடக்கும் என வெங்கட் பிரபு அறிக்கை வெளியிட்ட நிலையில் முன்னணி நடிகர்கள் மாத்திரம் கலந்து கொண்டிருந்தனர்.
பின்னர் மணமக்கள் வரவேற்பு நிகழ்வு ஆடம்பரமாக நடந்ததாக கூறப்படுகின்றது.
திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்த பொழுது, புகைப்படத்தில் இளையராஜா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட பிரபலங்கள் ஏன் வரவில்லை? என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன.
1000 சவரன் சீதனம்..
இந்த நிலையில், இந்து முறைப்படி நடைபெற்ற திருமணத்தில் பிரேம்ஜி பூணூல் அணிந்தார் எனவும் இந்து குடும்பத்தினர் பிரேம்ஜிக்கு மிகப்பெரிய சீதனம் வழங்கியுள்ளனர் என்றும் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
அந்த வகையில் பயில்வான், “ பிரேம்ஜி தன்னை விட 15 வயது சிறிய பெண்ணை தான் திருமணம் செய்திருக்கிறார். பிரபல வங்கியில் வேலை பார்த்து வரும் இந்து ஒரு பிராமணப் பெண். அமரன் அவர்களை ஒதுக்கி வெங்கட் பிரபு அப்பாவாக முன் நின்று திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார்.
மேலும் இந்துவை துரத்தி துரத்தி காதலித்து திருமணம் செய்த பிரேம்ஜி முரட்டு சிங்கிள் என வெளியில் கூறிக் கொண்டு அழைந்தவர். திருமணத்தின் போது பெண் வீட்டார் மாப்பிள்ளைக்கு 1000 சவரன் நகைகளை சீர் வரிசையாக வழங்கியுள்ளனர் ” என பேசியுள்ளார்.
பயில்வான் இப்படி பேசியது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பொய்யான கருத்துக்களை ஊடகங்களில் முன் வைப்பதால் பயில்வானுக்கு நெட்டிசன்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பு கிளம்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |