காய்ச்சலால் அவதிப்படும் தனுஷ்: பயில்வான் சொன்ன தகவல்
நடிகர் தனுஷ் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார் என பயில்வான் கூறியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகர் தனுஷ்
Photo Album: விமானத்திலும் Promotion செய்யும் படக்குழுவினர்.. மஞ்சள் கயிற்றுடன் சுற்றும் கீர்த்தி சுரேஷ்
தமிழ் சினிமாவில் பல ஹீட் படங்களை கொடுத்து, டாப் நடிகராக இருப்பவர் தான் நடிகர் தனுஷ்.
இவர், கடைசியாக நடித்த ராயன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
இதனையடுத்து தனுஷ் தற்போது, சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடிக்க கமிட்டானார். அத்துடன் இட்லி கடை படத்திலும் நடித்து வருகிறார்.
தற்போது, தனது சகோதரி மகனையும், அனிகா சுரேந்திரன் உள்ளிட்டோரையும் வைத்து “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” என்ற படத்தையும் இயக்கி முடித்திருக்கிறார். இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.
படுத்த படுக்கையாக இருக்கிறாரா?
இந்த நிலையில், அடுத்தடுத்து பிஸியாக இருக்கும் தனுஷின் உடல்நிலை சரியில்லை என பயில்வான் கூறியுள்ளார்.
அதாவது, “:தனுஷ் தயாரித்து நடித்து வரும் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த படத்தில், நடிகர் அருண் விஜய் வில்லனாக நடித்து வருகிறார். படப்பிடிப்பு தனுஷின் தேனியில் விறுவிறுப்பாக நடந்து வந்தது.
தற்போது படப்பிடிப்பை பாதியில் நிறுத்திவிட்டு நடிகர் தனுஷ் அமெரிக்கா சென்றார். அவர் திரும்பி வரும் பொழுது, அவருக்கு வைரல் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
இட்லி கடை படத்தில் சண்டைக்காட்சிகளில் நடிக்க முடியாது என்பதால் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கு மேல் இட்லி கடை படத்தின் படப்பிடிப்பு நடைபெறும்..” என பேசியுள்ளார்.
இந்த தகவல் அறிந்த தனுஷ் ரசிகர்கள், அவரின் உடல் நிலை குறித்து விசாரித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |