பிக்பாஸில் இந்த வாரம் வெளியேறுவது யார் தெரியுமா? இரண்டே நாளில் லீக் ஆன தகவல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை நாடியா, அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரி, இமான் அண்ணாச்சி மற்றும் அபிநய் ஆகியோர் வெளியேறி உள்ளனர்.
இவர்களைத் தொடர்ந்து இந்த வார வெளியேற்றத்திற்காக பிரியங்கா, சிபி, நிரூப், வருண், பாவனி மற்றும் அக்ஷரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இதுவரை பதிவாகியுள்ள ஓட்டுகளில் படி பாவணி மற்றும் அக்ஷரா தான் மிக மிக குறைந்த ஓட்டுகளை பெற்று உள்ளனர். இவர்களில் ஒருவர்தான் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
பாவனி வெளியேற மாட்டார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் குறைந்த ஓட்டுகளை பெற்று இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.