பாத்ரூமை இப்படி சுத்தம் செய்யுங்க.. ஈஸியா கறைகள் நீங்கிவிடும்
நமது வீட்டில் பாத்ரூமை சுத்தம் செய்வது மிகவும் அவசியமானதும், ஆரோக்கியமானதுமான ஒன்று. உப்பு நீர் காரணமாக பாத்ரூம் சீக்கிரத்தில் கறை படிந்து அழுக்காக இருப்பதால் தரையானது விரைவில் வழவழப்பாக மாறிவிடும். இதனை நாம் அடிக்கடி சுத்தம் செய்யவில்லையென்றால் துர்நாற்றம் வீசி சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும்.
டால்கம் பவுடர்
கழிப்பிடம் அதிக துர்நாற்றம் வீசினால் அதில் சிறிதளவு டால்கம் பவுடரை போட்டு அப்படியே சில நேரம் வைக்க வேண்டும். பின்பு, ஃபிளஸ் செய்ய வேண்டும். இதனை நாம் 3 முதல் 4 நாட்களுக்கு செய்தால் துர்நாற்றம் படிப்படியாக குறையும்.
பேஸ்ட்
பாத்ரூமில் உள்ள குழாய், வாஷ் பேசின் ஆகியவற்றை சுத்தம் செய்ய பல் துலக்கும் பேஸ்ட்டை ஸ்க்ரப் போல பயன்படுத்த வேண்டும். அதனுடன் சிறிதளவு பேக்கிங் சோடாவையும் பயன்படுத்தலாம்.
செய்தித்தாள்
பாத்ரூமில் உள்ள கண்ணாடியை தண்ணீர் மற்றும் செய்தித்தாள்களை வைத்து எளிதில் சுத்தம் செய்யலாம். தண்ணீரை வைத்து கண்ணாடி மீது தெளிக்க வேண்டும். பின்பு, செய்தித்தாளை அதன் மீது தேய்த்து சுத்தம் செய்தால் கண்ணாடி பளிச்சென்று மாறிவிடும்.
பாத்ரூம் பக்கெட்
துணி துவைக்க பயன்படுத்தும் சர்ப் தூளுடன் இனிப்பு சோடா மற்றும் சிறிதளவு வினிகர் கலந்து பாத்ரூம் பக்கெட்டை நன்கு தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்தால் நீர்க்கறைகள் முதல் பூஞ்சை வரை சுத்தமாகிவிடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |