குளியலறையில் கருகிய நிலையில் கல்லூரி மாணவி: நடந்தது என்ன?
வீட்டின் குளியலறையில் இளம்பெண் கருகிய நிலையில் கிடந்தது மதுரை திருமங்கலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த மறவன்குளம் பெருமாள் கோயிலில் சேர்ந்தவர் கார்த்திகா(20). பிகாம் படித்துள்ள இவர், நேற்று வீட்டின் குளியலறையில் தீயில் கருகிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
தகவலறிந்த திருமங்கலம் பொலிசார் கார்த்திகாவின் உடலை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் தடயவியல் துறையினர் வரவழைக்கப்பட்டு கார்த்திகா உடல் கிடந்து இடத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கார்த்திகாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பொலிசாருக்கு சந்தேகம் எற்பட்டுள்ள நிலையில், அவரது தந்தை கண்ணன் மற்றும் தாய் மீது சந்தேகமடைந்த பொலிசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
கல்லூரியில் படித்த இளம்பெண் ஒருவர், வீட்டின் குளியலறையில் தீயில் கருகிய நிலையில் கிடந்துள்ளதால், இது கொலையா தற்கொலையா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.