மசாஜ் செய்த நபருக்கு நேர்ந்த பரிதாப நிலை.... விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை காட்சி
முடிதிருத்தும் கடையில் மசாஜ் செய்ய சென்ற நபருக்கு நேர்ந்த சோகத்தை வெளிக்காட்டியுள்ளது இக்காட்சி.
இன்றைய காலத்தில் பலரும் தங்களுக்கு ஆக வேண்டிய வேலையினை மிகவும் சுலபமாக எவ்வாறு செய்து முடிப்பது என்று தான் நினைக்கின்றனர்.
அதிலும் விலை குறைவாகவும், நமக்கு பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்றும் நினைக்கின்றனர். இங்கு ஒரு விழிப்புணர்வு எச்சரிக்கை காட்சியை தான் நாம் காணப்போகின்றோம்.
அதாவது உடலை மசாஜ் செய்ய வேண்டும் என்றால் அதற்கு நாம் மசாஜ் செய்யும் இடமோ அல்லது பிசியோதெரபி போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டும்.
இங்கு நபர் ஒருவர் சலூன் கடை ஒன்றில் வேலை செய்பவரை மசாஜ ் செய்யக் கூறியுள்ளார். அவரும் குறித்த நபருக்கு மசாஜ் செய்துள்ளார்.
கடைசியாக தலையை திருப்பி மசாஜ் செய்த போது குறித்த நபரின் தலை அப்படியே நின்றுள்ளதுடன், வலிப்பு நோயாளி போன்று மாறியுள்ளார்.
மேலும் அவருக்கு சில முதலுதவிகள் செய்யப்பட்டும், நபர் எந்தவித அசைவும் இல்லாமல் இருந்த நிலையில், கடை உரிமையாளரும், அவருடன் இருந்த மற்றொரு நபரும் எஸ்கேப் ஆகியுள்ளனர்.
ஆனால் குறித்த காட்சி உண்மைத் தன்மை இல்லாதது என்றும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த செய்யப்பட்டுள்ளதாக சிலர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஆனால் பலரும் இந்த விபரீத விஷப்பரீட்சை தேவையா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கவனமாக இருங்கள். கழுத்து மற்றும் முதுகு எலும்பில் மசாஜ் செய்யும் போது கவனம் தேவை. pic.twitter.com/aIOvRNwY0K
— MadrasThambhi (@Madrasthambhi) November 11, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |