மொட்டை அடித்த போது கதறி அழுத புற்றுநோயாளி! சலூன் கடைக்காரரின் நெகிழ்ச்சி சம்பவம்
புற்று நோயினால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தலைமுடியை மொட்டை அடிக்கும் போது அப்பெண் கதறி அழுதுள்ள நிலையில் அவருக்கு ஆறுதல் கூற சலூன் கடைக்காரர் செய்த காரியம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புற்றுநோய்
இன்று மனிதர்களின் உயிரைப் பறிக்கும் அபாய நோயாக மாறியுள்ள புற்றுநோய், பலரையும் தாக்கி வருகின்றது. புற்றுநோய் வருவதற்கு முக்கிய காரணம் என்னவெனில், புகையிலை பழக்கம், உடல் எடை அதிகரிப்பு, மதுபழக்கம், உடல் உழைப்பு இல்லாமல் இருத்தல், காய்கறி பழங்களை அதிகமாக உட்கொள்ளாமல் இருத்தல் என்ற காரணங்கள் கூறப்படுகின்றது.
ஆனால் இந்த ஐந்து காரணங்களில் மிக முக்கியமாக இருப்பது புகையிலை பழக்கம் தான் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
புற்றுநோய் பல உறுப்புகளில் வந்தாலும் நுரையீரல், கல்லீரல், பெருங்குடல், வயிறு மற்றும் மார்பகம் ஆகிய உறுப்புகளிலேயே பெரும்பாலும் புற்றுநோய் உண்டாகிறது.
இவ்வாறு புற்றுநோயினால் பாதிக்கப்படுபவர்கள் தங்களது முடியை இழக்க நேரிடும். பெரும் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தலைமுடியை மொட்டை அடித்துக் கொள்வார்கள்.
கதறி அழுது புற்றுநோயாளி
இங்கு பெண் ஒருவர் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர் தனது தலைமுடியை மொட்டை அடித்துக்கொள்வதற்கு சலூன் கடைக்கு வந்துள்ளார்.
அங்கு தனது முடியை மொட்டை அடிக்கும் போது குறித்த பெண் சோகத்தினை தாங்கிக் கொள்ளமுடியாமல் கதறி அழுதுள்ளார்.
கதறியழுத அப்பெண்ணிற்கு சலூன் கடைக்காரர் பல வழிகளில் ஆறுதல் கூறியும் அழுகையை நிறுத்தாததால், இறுதியில் தனது முடியையும் மொட்டை அடித்துக்கொண்டு அப்பெண்ணிற்கு ஆறுதல் கூறியுள்ளார்.