வடிவேலுவாக மாறிய கண்ணம்மா! எடுத்த நாள் முதல்… இந்த நாள் வரை வண்டியை விடவில்லை!
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி, குழந்தை போல் ஷாப்பிங் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னிலையில் உள்ளது.
இதில் கண்ணம்மாவாக ரோஷினியும், பாரதியாக அருணும் நடிக்கின்றனர்.
ரோஷினி, சீரியலில் சுயமரியாதை உள்ள தைரியமான பெண் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனால் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இன்ஸ்டாகிராமில் மட்டும் அவருக்கு ஏழு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரோஷினி அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், ரோஷினி சின்ன குழந்தை போல ஷாப்பிங் ட்ராலியில் அமர்ந்து சென்று இருக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வீடியோவில் வடிவேலு காமெடியில் வரும் ’எடுத்த நாள் முதல் இந்த நாள் வரை வண்டியை விடவில்லை’… என்ற காமெடி பாடலை பின்னனியில் இணைத்துள்ளார்.
இந்த வீடியோ இப்போது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.