உயிருக்கு போராடும் லட்சுமி…பதறியடித்து ஓடும் பாரதி
பாரதி கண்ணம்மாவில் உயிருக்கு போராடும் லட்சுமியை காப்பாற் பாரதி நீரில் குதிக்கும் காட்சிகள் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாரதி கண்ணம்மா தொடரின் தற்போதைய ப்ரோமோக்கள் மற்றும் காட்சிகள், ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் சென்று கொண்டிருக்கிறது.
பாரதி தான் தன்னுடைய தந்தை என்பதை தெரிந்து கொண்ட லட்சுமி, தந்தையுடன் அதிக நேரம் இருக்க வேண்டும் என்பதில் தான் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில் அண்மையில் வெளியான ப்ரோமோ காட்சிகள் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.
ஹேமாவுடன், லட்சுமி விளையாடி கொண்டிருக்கும் போது நீருக்குள் பந்து விழுகின்றது. அதை எடுக்க சென்ற லட்சுமி நீருக்குள் விழுந்து விடுகின்றார். அவரை பதறியடித்து ஓடி வந்து பாரதி காப்பாற்றுகின்றார்.