நள்ளிரவில் கண்ணம்மாவுடன் பாரதியின் ரொமான்ஸ்: பரபரப்பான ப்ரொமோ காட்சி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் நீதிமன்ற உத்தரவின் பெயரில் பாரதி கண்ணம்மாவுடன், அவருடன் வீட்டில் வசிப்பதற்கு வந்துள்ளார்.
இந்நிலையில் இன்றைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மழையினால் பாதிக்கப்பட்டு தத்தளித்து வருகின்றது. இதில் தமிழகமும் அடங்கும்.
இந்த சீரியலில் இயக்குனர் இந்த மழையினை வைத்து கூட பாரதி கண்ணம்மா ரசிகர்களை கவர்ந்துள்ளார். வெளியே படுத்திருக்கும் பாரதி திடீரென மின்னல் சத்தம் கேட்டு எழுந்த நிலையில், வீட்டிற்குள் மழை நீர் வந்துவிடுகின்றது.
பின்பு கண்ணம்மாவை எழுப்பி இருவரும் இணைந்து தண்ணீரை வெளியேற்ற முயற்சிகளை செய்து வருகின்றனர். இதில் பாரதி ஒரு இடத்தில் தடுமாறவே கண்ணம்மா, பாரதி இடையே ரொமான்ஸ் ஆரபமாகியுள்ளது.