பாரதி கண்ணம்மா சீரியலில் ஏற்பட்ட திடீர் திருப்பம்... அடுத்த நடப்பது என்ன? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் தொலைக்காட்சி பார்வையாளர்கள் இடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியும் கண்ணாம்மாவும் எப்போது ஒன்று சேர்வார்கள் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்த சீரியலில் மருத்துவராக இருக்கும் பாரதியை திருமணம் செய்துகொள்ளும் ஏழ்மையான பெண் கண்ணம்மா இருவரும் வெண்பா என்ற பெண்ணின் சூழ்சியால் பிரிந்து விடுகின்றனர். வெண்பா பாரதியை திருமணம் செய்து கொள்வதற்கு பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றார். பிரிந்து சென்ற கண்ணம்மாவிற்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறக்க, கருப்பாக இருக்கும் ஒரு குழந்தையை மாமியார் சௌந்தர்யா எடுத்து வளர்க்கின்றார்.
மற்றொரு குழந்தை கண்ணம்மாவால் வளர்ந்து வருகின்றது. தனது வீட்டில் அம்மாவால் வளர்க்கப்படும் ஹேமா தனக்கு பிறந்த குழந்தைதான் என்பது பாரதிக்கும், கண்ணம்மாவிற்கும் தெரியாத நிலையில், இருவரும் பிரிந்து 8 ஆண்டுகள் கடந்துவிடுகிறது. பாரதியை விட்டு பிரிந்து வாழும் கண்ணம்மா, ஹேமா படிக்கும் பள்ளியில் சமையல் வேலையில் சேர்கிறார்.
அங்கே ஹேமா கண்ணம்மாவுடன் அன்பாக நெருக்கமாகிறாள். இந்நிலையில் குறித்த பள்ளியின் ஆண்டுவிழாவில் பாரதி சிறப்பு விருந்தினராக வரவே, அங்கு கண்ணம்மா வளர்க்கும் குழந்தையின் படிப்பு செலவினை தான் பார்த்துக்கொள்வதாக ஏற்றுக்கொண்டுள்ளார்.
குழந்தையின் அம்மா யார் என்று தெரிந்து கொள்வதற்காக பாரதி கண்ணம்மாவை வேலைக்கு அழைக்கவே, ஆனால் கண்ணம்மாவோ ஓடி ஒளிந்து கொள்கின்றார். பிரபல ரிவி வெளியிட்ட இந்த ப்ரொமோ இல்லத்தரசிகளின் பல எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் சந்திப்பார்களா? அடுத்த என்ன நடக்கும்? என்று பல கேள்விகளில் இருந்து வருகின்றனர்.