வெண்பாவின் சூழ்ச்சியால் கண்கலங்கி நிற்கும் கண்ணம்மா! நடந்தது என்ன?
வெண்பா செய்த சூழ்ச்சியால் கண்ணம்மாவின் ஆசிரியர் வேலை பறி போயுள்ளது.
சூடுபிடிக்கும் பாரதி கண்ணம்மா சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கும் தொடர் தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் முதல் பாகத்தை நல்லப்படியாக நிறைவு செய்து விட்டு தற்போது இரண்டாவது பாகத்தை தொடங்கியுள்ளது.
இந்த சீரியல் ஆரம்பத்திலே ஒரு டுவிஸ்ட்டுடன் தான் ஆரம்பிக்கபட்டுள்ளது. கண்ணம்மாவாக நடித்து வரும் வினுஷாவை சித்ராவாக அறிமுகப்படுத்தி பின்னர் ரேஷ்மாவை கண்ணம்மாவாக உள்ளே கொண்டு வந்துள்ளார்கள்.
மேலும் பாரதியை ஒரு ஊதாரியாக காட்டி தற்போது பாரதிக்கும் கண்ணம்மாவிற்கு ஒரு காதல் வலையை உருவாக்கியுள்ளார்.
இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட பாரதி கண்ணம்மா சீரியலின் முக்கிய கதாபாத்திரமான வெண்பாவை கடந்த சில தினங்களுக்கு முன்னரே என்றி கொடுத்துள்ளார்கள்.
நீலாம்பரி போல் சீன் போடும் வெண்பா
இந்த நிலையில், பணக்கார வீட்டு நீலாம்பரி போல் நடந்து கொண்டு வருகிறார் வெண்பா. இதனை தொடர்ந்து பாரதி போன்ற ஒருவரை திருமணம் செய்து கொள்ள முடியாது எனவும் கூறியுள்ளார்.
வெண்பாவின் சின்ன வயது நண்பியை டி என அழைத்தற்கு கன்னத்தில் அறைந்து அவமானப்படுத்தியுள்ளார். இதற்கான பதிலடியை கண்ணம்மா வெண்பாவிற்கு கன்னம் வெடித்து போகும் அளவிற்கு திருப்பிக் கொடுத்துள்ளார்.
இதனால் கண்ணம்மா மீது கடும் கோபத்தில் இருக்கும் வெண்பா தண்ணீர் போத்தலில் தூக்க மாத்திரை கலந்து வைத்துள்ளார்.
கண்ணம்மாவின் கண்ணீருக்கான காரணம்
அந்த நீரை குடித்த கண்ணம்மா வகுப்பறையில் அசந்து தூங்கியுள்ளார்.
இதனால் வகுப்பறையில் இருக்கும் மாணவர்கள் அடிதடி போட்டு குறித்த மாணவனின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதனை பார்த்து கோபமடைந்த பாரதி அம்மா கோபம் கொண்டு இனி பாடசாலைக்கு வரவேண்டாம் எனக் கூறியுள்ளார். இந்த டுவிஸ்ட்டை எதிர்பார்க்காத கண்ணம்மா கண்கலங்கிய படி நின்றுள்ளார்.