என்ன மன்னிச்சிடுங்க.... முதன் முறையாக கண்ணம்மா வெளியிட்ட வீடியோ! கடும் சோகத்தில் ரசிகர்கள்
பாரதி கண்ணம்மாவில் இருந்து விலகிய பின்னர் முதன் முறையாக ரோஷினி காணொளி வெளியிட்டு ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரோஷினி சீரியலில் இருந்து திடீரென விலகியுள்ளார்.
அக்டோபர் 23ஆம் திகதி சூட்டிங்கில் கலந்து கொண்டு பின்னர் சீரியலில் இருந்து விடை பெறுகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டாராம்.
#BarathiKannamma #RoshiniPriyan pic.twitter.com/UDjA2BLKeQ
— chettyrajubhai (@chettyrajubhai) November 15, 2021
இந்த நிலையில் இது குறித்து அவர் காணொளி ஒன்றை வெளியிட்டு மன்னிப்பு கோரியுள்ளார்.
அதில் ‘பாரதி கண்ணம்மா தொடரில் சில காரணத்தால் என்னால் தொடர முடியவில்லை.
என்னுடைய இந்த முடிவு உங்களை காயப்படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்.
நீங்கள் இல்லை என்றால் இவ்வளவு தூரம் என்னால் வந்திருக்க முடியாது. எதிர்காலத்திலும் இதே போல ஆதரவை எனக்கு தருவீர்கள் என்று நம்புகிறேன் என்றும் குறித்த காணொளி குறிப்பிட்டுள்ளார். இந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.