ரத்தக்களறியான முகத்தில் ஆக்ரோஷமான கண்ணம்மா! நடந்தது என்ன?
பாரதி கண்ணம்மா சீரியல் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், தற்போது கண்ணம்மா வேலை செய்யும் மருத்துவமனையை தீவிரவாதிகள் தனது கட்டுக்குள் வைத்துள்ள காட்சி ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி வெண்பாவின் சதியால் பாரதியும், கண்ணம்மாவும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் எப்பொழுது ஒன்று சேர்வார்கள் என்ற எண்ணம் ரசிகர்களிடையே அதிகமாக இருந்து வருகின்றது.
சமீப நாட்களாக தீவிரவாதிகளின் பிடியில் கண்ணம்மா மற்றும் பாரதி, சக மருத்துவமனை ஊழியர்கள் என அனைவரும் மாட்டிக் கொண்டுள்ளனர். இவர்களின் பிடியிலிருந்து எப்போது மீண்டு வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தாலும், குறித்த சீரியலில் சுவாரசியம் சற்று குறைவாக இருக்கின்றது.

தீவிரவாதியை பழி வாங்கிய கண்ணம்மா
இந்நிலையில் மருத்துவமனை ஊழியவர்கள் கழிவறைக்கு செல்லும் போது தவறாக நடந்து கொள்வதால் கதறிய படி பெண்கள் வருகின்றனர். இதனை அவதானித்த கண்ணம்மா உண்மை என்ன என்று தெரியாமல் இருக்கின்றார்.
ஒரு கட்டத்தில் தானே கழிவறைக்கு செல்ல முடிவு செய்த நிலையில், குறித்த தீவிரவாதி கண்ணம்மாவிடம் தவறாக நடந்து கொள்கின்றார். இதில் ஆக்ரோஷமான கண்ணம்மா குறித்த தீவிரவாதியை அருகில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து தாக்குகின்றார். அவரது முகத்தில் ரத்தம் தெளித்த நிலையில் ஆக்ரோஷமாக காணப்படுகின்றார்.