படப்பிடிப்பின் போது நடிகை பானுப்பிரியாவுக்கு வந்த அந்த ஒரு கால்.. இன்று வரை மறுக்க முடியாத சோகம்!
90-ஸ் காலக்கட்டத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் பானுப்பிரியா. இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமடைந்தவர்,.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். அப்போது எல்லாம் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்தது.
தமிழில் 40க்கு மேற்பட்ட படங்களிலும், தெலுங்கில் 55 படங்களிலும், ஹிந்தியில் 14 படங்களிலும் கன்னடம் மலையாளம் என ஒட்டு மொத்தமாக சுமார் 111க்கும் மேற்பட்ட படங்களில் நடிகை பானுப்பிரியா நடித்துள்ளார்.
இவர், அமரிக்காவைச் சேர்ந்த விருது பெற்ற பிரபல புகைப்படக்கலைஞர் ஆதர்ஷ் கவுசல், என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலான பானுப்பிரியா திருமணத்திற்கு பிறகும் படங்களில் அம்மா கேரக்டரில் நடித்து வருகிறார்.
இறுதியாக நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தில் பானுப்பிரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனிடையே, சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர், கடைக்குட்டி சிங்கம் படத்தின் படப்பிடிப்பிற்காக தென்காசியில் இருந்த போது எனக்கு ஒரு போன் கால் வந்தது.
அதில் அமெரிக்காவில் உள்ள உங்கள் கணவர் திடீரென ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட்டார் என கூறினார்கள். அது என் வாழ்நாளில் மறக்க முடியாத சோகம்.
இன்று வரை அதில் இருந்து நான் மீளவில்லை என சோகத்துடன் தெரிவித்து இருந்தார்,. தற்போது பானுப்பிரியா தற்போது அவர் மகளுடன் வசித்து வருகிறார்.