"நான் படிப்பை நிறுத்தியதற்கு பாக்கியராஜ் தான் காரணம்" நடிகை பாணுப்பிரியா மறைக்கப்பட்ட உண்மை
நடிகை பானுப்பிரியாவிற்கு பள்ளி கூடத்தில் படிக்க முடியாமல் போனதிற்கு காரணம் நடிகர் பாக்கியராஜ் என வெளிப்படையாக கூறியுள்ளார்.
நடிகை பானுப்பிரியா
80 ஸ் களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை பானுப்பிரியா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் போன்ற பிறமொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.
இவர் சுமார் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் தனது 17வது வயதிலேயே சினிமாவில் நடிக்க தொடங்கி விட்டார். 1983 ம் ஆண்டு வெளிவந்த மெல்ல பேசுங்கள் படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார்.
இவர் ஆதர்ஷ் கவுஷல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நடிகை பானுப்பிரியா தான் படிக்காமல் போனதிற்கு நடிகர் பாக்கியராஜ் தான் காரணம் என கூறியுள்ளார்.
அவர் பேசும் போது "பாக்கியராஜ் எனது நடனத்தை பார்த்து என்னை அவருடைய சினிமா படத்தில் நடிக்க வைக்க என்னை ஆர்வப்படுத்தினார்.
பின் போட்டோஷீட் எடுத்தார் அந்த போட்டோஷீட்டில் அந்த கதாப்பாத்திரத்திற்கு நான் பொருந்தவில்லை என்று என்னை அந்த படத்தில் இருந்து விலக்கி விட்டார்.
இந்த நேரத்தில் நான் பயிலும் பள்ளி கூடத்தில் பாக்கியராஜ்யின் படத்தில் நடிக்கப்போவதாக கூறியிருந்தேன்.
அதனால் படத்தில் இருந்து விலக்கப்பட்டது எனக்கு மிகவும் அதிர்ச்சியை தந்தது இந்த தகவல் பள்ளியில் எல்லோருக்கும் தெரிய வர என் நண்பர்கள் என்னை கேலி செய்தனர்.
அதனால் நான் பள்ளி செல்வதை நிறுத்திவிட்டேன். எவ்வளவோ போராட்டங்களுக்குபிறகு 1983 ம் ஆண்டு தான் எனக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது". என கூறியுள்ளார் பானுப்பரியா.