வசீகரிக்கும் அழகு! வாழ்வில் ஒருமுறையாவது இங்கு சென்றுவிடுங்கள்
பூமியின் சொர்க்கபுரி என போற்றப்படும் ஜம்மு காஷ்மீர் பகுதியில் பல எழில் கொஞ்சும் தோற்றங்களை நாம் கண்டு கொண்டாடிட முடியும்.
அழகான காட்சிகள், பனியினால் மூடப்பட்ட மலைப் பகுதிகள், பல வனஜீவராசிகள், சிறப்பிடங்கள், விருந்தோம்பல் பண்புடைய மக்கள், உள்ளுர் கைப்பணிகள் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.
இந்த சொர்க்கபுரி என்பது வெறுமனே காட்சிகளுக்கு மட்டும் வரையறுக்கப்பட்டதாக இல்லை.
காஷ்மீர் பள்ளத்தாக்கு அதனை விடவும் ஆச்சரிமான அழகிய தோற்றத்தை கொண்டவை.
இந்தியாவின் சொர்க்கபுரி
சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவரக்கூடிய இன்னமும் பெரிதாக பிரபல்யப்படாத பகுதிகளில் ஒன்றாக பாங்குஸ் பள்ளத்தாக்கினை கூற முடியும்.
ஜம்மு காஷ்மீர் மாநிலமானது குல்மார்க், சொன்மார்க் மற்றும் பஹல்கம் போன்ற புகழ்பூத்த சுற்றுலாத்தளங்களை மட்டும் கொண்டமைந்தவை அல்ல சுற்றுலாப் பயணிகளினாலும் இந்த உலகத்தினாலும் அதிகம் அறிந்து கொள்ளப்படாத பல இடங்களும் காணப்படுகின்றன.
சில தசாப்தங்கள் வரையில் இவை பெரிதாக கண்டு கொள்ளப்படவில்லை. மக்கள் சஞ்சரமற்ற அழகிய எழில் தோற்றத்தைக் கொண்ட காட்சியாக பாங்குஸ் பள்ளத்தாக்கு காணப்படுகின்றது.
கடந்த ஆண்டில் இந்தியாவில் அதிகம் அறியப்படாத 75 சுற்றுலா தளங்களை மத்திய அரசாங்கம் பட்டியலிட்டிருந்தது.
வசீகரிக்கும் பாங்குஸ் பள்ளத்தாக்கு
இவற்றில் ஒன்றாக பாங்குஸ் பள்ளத்தாக்கு காணப்படுகின்றது. இமயமலை பகுதிக்குள் அமையப் பெற்றுள்ள இந்த பாங்குஸ் பள்ளதாக்கு மலைப்பாங்கான பகுதியின் உயிரியல் கட்டமைப்பைக் கொண்ட ஓர் தனித்துவமான சுற்றுச்சூழல் கலவையாகும்.
மலையுச்சிப் பகுதிகளில் ஒர் விதமான சூழலும் பள்ளத்தாக்கு அல்லது உயரம் குறைந்த பகுதிகளில் ஓரு வகையான சூழலும் காணப்படுகின்றது.
குறைந்த உயரத்திலான தாவரங்களும், ஊசியிலைக் காடுகளும் இதில் காணப்படுவதுடன் பல்வகைமையுடைய உயிரினங்கள் வாழ்கின்றன.
பல ஆண்டுகளாக இந்த பகுதி பெரிதும் கவனத்திற் கொள்ளப்படாத பகுதியாக காணப்பட்டது.
எனினும் தற்பொழுது இந்தப் பகுதி மிகவும் ரம்மியமான காட்சிகளையுடைய சுற்றுலா சொர்க்கபுரியமாக மாற்றமடைந்துள்ளது.
இந்தியாவின் சுவிட்சர்லாந்து
பாங்குஸ் பள்ளதாக்கு இரண்டு பிரிவுகளைக் கொண்டமைந்துள்ளது. பெரிய பாங்குஸ் மற்றும் சிறிய பாங்குஸ் என இரண்டு பிரிவுகளாக காணப்படுகின்றன.
இவை சுமார் 300 கிலோ மீற்றர் வரையில் பரந்து விரிந்து காணப்படுகின்றன. பங்குஸ் எங்கு அமைந்துள்ளது ஜம்பு காஷ்மீர் மாநிலத்தின் ஹன்ட்வாரா துணை மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 10000 கிலோ அடி உயரத்தில் இந்த பள்ளத்தாக்கு அமைந்துள்ளது.
இந்தியாவின் சுவிட்சர்லாந்து பங்குஸ் பள்ளத்தாக்கு இந்தியாவின் சுவிட்சர்லாந்து என வர்ணிக்கப்படுகின்றது.
இந்தப் பெயருக்கு ஏற்ற வகையில் சில ஆண்டுகளில் இந்த பகுதி அபிவிருத்தி செய்யப்பட உள்ளது.
நீர், சக்தி வளம் தொழில் வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு வழிகளில் இந்தப் பகுதி அபிவிருத்தி செய்யப்பட உள்ளது.
பங்குஸ் பள்ளத்தாக்கினை அடைவதற்கான பல்வேறு பாதைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் ஏற்கனவே சில பாதைகள் நிர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.