5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி; அரசாணை வெளியீட்டால் மக்கள் மகிழ்ச்சி!
தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் நகைக்கடன் தள்ளுபடி செய்த விஷயம் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
அதில், கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இதனிடையே, திமுக ஆட்சி அமைந்தது எப்போது நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்ற அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்தது.
அதன் அடிப்படையில், 13ம் தேதி நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
மேலும், ஒரு குடும்பத்துக்கு 5 பவனுக்கு உட்பட நகைக் கடன்களை சில தகுதிகளின் கீழ் உண்மையான ஏழை எளிய மக்கள் பயன்பெறு வகையில் தள்ளுபடி செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.