பெங்களூர் பாணியில் அசத்தல் தேங்காய் சட்னி... இந்த ஒரு பொருளை சேர்த்து பாருங்க
பொதுவாகவே தென்னிந்திய உணவுகளில் சட்னி வகைகளுக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது.
சட்னி என்னறாலே முதல்லில் நினைவுக்கு வருவது தேங்காய் சட்னி தான். இந்தளவுக்கு உலகம் முழுவதும் பிரபல்யம் வாய்ந்த ஒரு உணவுப்பொருளாக தேங்காய் சட்னி இருக்கின்றது.
இதனை ஒவ்வொரு பிராந்திய மக்களும் தங்களுக்கான தனித்துவமான பாணியில் செய்வார்கைள்.அந்த வகையில் பெங்களூர் பாணியில் அருமையான சுவையில் எவ்வாறு தேங்காய் சட்னி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள்
தேங்காய் துருவல் - 1/2 கப்
பொட்டுக்கடலை - 1/4 கப்
பச்சை மிளகாய் - 3 முதல் 5
புளி - சிறிய துண்டு
சீரகம் - 1/4 தே.கரண்டி
பூண்டு - 2 பற்கள்
கறிவேப்பிலை - 1 கொத்து
புதினா - சிறிதளவு
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப
சர்க்கரை - ஒரு சிட்டிகை
தண்ணீர் - அரைத்து சட்னியில் கலக்க தேவையான அளவு
தாளிக்க: - எண்ணெய் - 1 தே.கரண்டி
கடுகு - 1/2 தே.கரண்டி
உளுந்தம் பருப்பு - தே.கரண்டி
வர மிளகாய் - 1
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரிலில் தேங்காய் துருவல், பச்சை மிளகாய், பொட்டுக்கடலை, பூண்டு, புளி, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, புதினா இலைகள், ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், சர்க்கரை, மற்றும் உப்பு ஆகியவற்வை கொடுக்கப்பட்டுள்ள அளவுகளில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அந்த கலவையை கெட்டியாகன மற்றும் கொரகாரப்பான பதத்தில் அரைத்துக்கொள்ள வேண்டும். அரைத்த பிறகு இங்கும் கறிவேப்பிலை, கொத்தமல்லி போன்றவை தெரியும் அளவில் அரைத்தால் போதுமானது.
அதனையடுத்து அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்தம்பருப்பு, சிவப்பு மிளகாய் சேர்த்து தாளித்து சட்னி மீது ஊற்றினால் அவ்வளவு தான், பெங்களூர் பாணியில் அசத்தல் தேங்காய் சட்னி தயார். கொத்தமல்லி தான் இந்த சட்னியில் சுவையை கூட்டும் ரகசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |