பீட்சா சாப்பிடுபவரா நீங்கள்? பீட்சாவுக்கு அருகே கிடந்த கழிவறை மாப் - கொதித்தெழுந்த நெட்டிசன்கள்
இன்றைய காலகட்டத்தில் இயற்கையான உணவுகளை விட புது விதமான உணவுகளையும் நாம் சாப்பிட்டு வருகிறோம்.
அந்த வகையில், இன்றுள்ள இளம் தலைமுறையிடையே வெகுவாக அறிமுகமாகி இருக்கும் உணவுகளில் முக்கியமானது பீட்சா. இதனை இன்றைய தலைமுறை மக்கள் அடிக்கடி சாப்பிட்டு வருகிறார்கள்.
இதனால் உடலுக்கு பலவிதமான கெடுதல் வருவதை அறிவதில்லை. இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் இருக்கும் டாமினோஸ் உணவகத்தில் தயாரிக்கப்பட்ட பீட்சா மாவுக்கு அருகிலேயே கழிவறையில் உபயோகம் செய்யப்படும் மாப் மற்றும் பிரஸ் போன்ற பொருட்கள் வைக்கப்பட்டு இருந்துள்ளன.
இதனைத்தொடர்ந்து, இதைக்கண்ட நெட்டிசன்கள் தயவு செய்து வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை உண்ணுங்கள்.
மேலும், பீட்சா பிரியர்கள் சிலர் அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Photos from a Domino's outlet in Bengaluru wherein cleaning mops were hanging above trays of pizza dough. A toilet brush, mops and clothes could be seen hanging on the wall and under them were placed the dough trays.
— Tushar ॐ♫₹ (@Tushar_KN) August 14, 2022
Please prefer home made food ? pic.twitter.com/Wl8IYzjULk