வாழைப்பழ பிரியர்களுக்கு வெளியான சோகச் செய்தி.. வெள்ளைத் திட்டுகள் பற்றிய உண்மை!
பொதுவாக அனைவரும் வாங்கி சாப்பிடும் பழங்களில் ஒன்று தான் வாழைப்பழம்.
இந்த பழத்தில் ஏகப்பட்ட மருத்துவ நன்மைகள் இருக்கின்றது. இதன் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மதிய உணவிற்கு பின்னர் விரும்பி சாப்பிடுவார்கள்.
வாழைப்பழம் சாப்பிடுவது ஆரோக்கியமானது என்றாலும், வாழைப்பழம் நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கவும், அதன் மூலமாக நமக்கு தீங்கு ஏற்படவும் வாய்ப்பு இருப்பதை மறுக்க முடியாது.
அந்த வகையில் வாழைப்பழத்தை வாங்கும் பொழுது கவனிக்க வேண்டிய விடயங்களும் அதிலிருந்து பரவும் நோய்கள் பற்றியும் தெரிந்து கொள்வோம்.
வாழைப்பழம் பற்றி தெரியாத ஒன்று
பொதுவாக வாழைப்பழங்கள் வாங்கும் பொழுது அதன் மீது என்ன இருக்கின்றது என்பதனை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
வாழைப்பழங்களின் மேல் வெள்ளை நிற திட்டுகள் போல் இருந்தால் அபாயம் என எச்சரிக்கப்படுகின்றது.
“பூச்சிகள் கூடுகட்டி இருந்தால்தான் அதுபோன்ற வெள்ளைத் திட்டுகள் தென்படும்’’ எனவும் இணைய பயனர்கள் கூறுகின்றார்கள்.
விளக்கம்
கடைகளில் வாங்கும் வாழைப்பழங்களின் மீது வெள்ளையாக காணப்படுவது “ மாவுபூச்சி” என அழைப்படும்.
இது பெரிய அளவுக்கு அபாயகரமானது கிடையாது. வாழைப்பழங்களின் இடுக்குகளுக்கு இடையே வாழ்வதற்கு சௌகரியமான இடம் கிடைப்பதால் இந்த பூச்சிகள் அங்கு குடியேறுகின்றன.
இதனால் யாரும் வெள்ளை படங்களை பார்த்து பயம் கொள்ள வேண்டியது இல்லை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |