உடல் எடையை விரைவாக குறைக்கும் வாழைத்தண்டு சூப்...இவ்வளவு ஈசியா?
வாழைத்தண்டு உடல் எடையை குறைக்க உதவும் அற்புதமான உணவு பொருள்.
கொழுப்பு உடனடியாக ரத்தத்தில் கலப்பதை இதன் சாறு தடுக்கும்.
இதில் நார்ச்சத்து அதிகமுள்ளதால் மலச்சிக்கலுக்கு தீர்வாக அமையும். இதனை வைத்து எப்படி எடையை குறைக்கும் சூப் தயாரிப்பது என்று பார்க்கலாம்.
வடை திருடும்போதே கைது பண்ணியிருக்கனும்!இப்ப பாருங்க முட்டையில வந்து நிக்குது!
தேவையான பொருள்கள்
- வாழைத்தண்டு - 1 துண்டு
- கொத்தமல்லி - 1/2 கட்டு
- மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
- சீரகத்தூள் - 1 ஸ்பூன்
- உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
முதலில் வாழைத்தண்டையும், கொத்தமல்லியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாழைத்தண்டு, கொத்தமல்லி இரண்டையும் மிக்ஸியில் போட்டு, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வடிகட்டவும். வடிகட்டியதை அடுப்பில் வைத்து மிதமான தீயில் 10 நிமிடம் கொதிக்க விடவும்.
கொதி வந்தவுடன் உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து கலந்து இறக்கி பரிமாறவும்.
சுவையான வாழைத்தண்டு கொத்தமல்லி சூப் ரெடி. ஏனைய உணவுகளை குறைந்து இந்த சத்தான சூப்பை எடுத்து கொள்ளும் போது ஒரே நாளில் எடை குறையும் மாற்றத்தினை உணரலாம்.