இவ்வளவு ஈஸியா? வாழைப்பழம் ராகி மாவு கொழுக்கட்டை.. குழந்தைகளின் Favourite
கோடைக்காலம் வந்துவிட்டால் வீட்டின் குழந்தைகளின் அட்டகாசத்திற்கு பஞ்சமே இருக்காது.
மாலை நேரங்களில் தினமும் ஏதாவது ஸ்நாக்ஸ் செய்ய வேண்டி கூட வரலாம். அதே சமயம் குழந்தைகளுக்கு கொடுக்கும் ஸ்நாக்ஸ் உடல் ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்க வேண்டும் என சிந்திப்பார்கள்.
அப்படியானவர்கள் வீட்டில் வாழைப்பழமும், ராகி மாவும் இருந்தால் சுவையான கொழுக்கட்டை செய்து கொடுக்கலாம்.
இந்த கொழுக்கட்டை சுவையுடன் சேர்த்து உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தையும் வழங்குகிறது. பார்ப்பதற்கு மெலிவாக இருக்கும் குழந்தைகளுக்கும் அடிக்கடி செய்து கொடுக்கலாம். எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
அந்த வகையில், வாழைப்பழ ராகி கொழுக்கட்டை எப்படி செய்யலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
* வாழைப்பழம் - 2
* தேங்காய் - 2 கைப்பிடி
* பாதாம் - 10
* ஏலக்காய் - 2
* ராகி மாவு - 1 கப்
*நெய் - 1 டீஸ்பூன்
* நாட்டுச்சர்க்கரை - 1/2 கப்
* நெய் - 1 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 2 கைப்பிடி
* வாழைப்பழம் - 1 (பொடியாக நறுக்கியது)
* காய்ச்சிய பால் - 1 கப்
* நாட்டுச்சர்க்கரை - 1 டீஸ்பூன்
கொழுக்கட்டை செய்முறை
முதலில் மிக்சர் ஜாரில் 2 வாழைப்பழத்தை போட்டு நன்றாக அரைத்து பாத்திரத்தில் ஊற்றி வைக்கவும். அதன் பின்னர் அதே ஜாரில் 2 கைப்பிடி தேங்காய், 10 பாதாம், 2 ஏலக்காய் சேர்த்து நன்கு அரைத்து வாழைப்பழத்துடன் சேர்த்து கலந்து விடவும்.
அதனுடன் கொஞ்சம் கொஞ்சமாக ராகி மா கலந்து பிசைந்து விடலும். 1 டீஸ்பூன் நெய், நாட்டுச்சர்க்கரை சேர்த்து சப்பாத்தி மா பதத்திற்கு வரும் வரை பிசைந்து கொள்ளவும். அந்த மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, நடுவே அழுத்தி, இட்லி தட்டில் வாழை இலை விரித்து அவித்து எடுக்கவும்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், துருவிய தேங்காய் லேசாக வறுத்து எடுக்கவும். அதன் பின்னர், பொடியாக நறுக்கிய 1 வாழைப்பழம், காய்ச்சிய பால் மற்றும் நாட்டுசக்கரை ஆகியவற்றை ஒன்றாக போட்டு கொதிக்க விடவும்.
இறுதியாக அதில் வேக வைத்துள்ள ராகி கொழுக்கட்டையை சேர்த்து கிளறி, மூடி வைத்து 2 நிமிடம் வேக வைத்து இறக்கினால் சுவையான “வாழைப்பழ ராகி கொழுக்கட்டை” தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |