நுளம்புகளை விரட்டியடிக்கும் வாழைப்பழத்தோல்- பயன்படுத்துவது எப்படி?
பொதுவாக ஒவ்வொரு வீடுகளிலும் நுளம்புத் தொல்லை சமீபக்காலமாக அதிகரித்து வருகின்றது.
எப்படியாவது நுளம்புகளை விரட்டி விடலாம் என பல முயற்சிகள் செய்திருப்போம். இவற்றை தாண்டி நுளம்புகள் வீட்டினுள் வந்து விடும்.
நுளம்புகளை விரட்ட இயற்கையான டிப்ஸ்களை செய்து பார்க்கலாம். இதன் பலன் இரட்டிப்பாக இருக்கும்.
அந்த வகையில், நாம் சாப்பிட்ட பின்னர் வீசும் வாழைப்பழத் தோலை வைத்து நுளம்புகளை எப்படி விரட்டலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
நுளம்புகளை விரட்டும் வாழைப்பழத்தோல்
1. வாழைப்பழத்தோலை எடுத்து அதனை வெயிலில் காய வைத்து குறைவான வெப்ப நிலையில் அடுப்பில் வைத்து உலரவிட வேண்டும். இந்த வாழைப்பழத் தோலை தூபத்துடன் சேர்த்து எரிக்கும் போது அதில் வெளியாகும் புகை நுளம்புகளை விரட்டும்.
2. வாழைப்பழத்தோலை அரைத்து பேஸ்ட்டாக்கி, வீட்டின் மூலை முடுக்கெல்லாம் தூவி விட வேண்டும். இந்த வாசனைக்கு நுளம்புகள் வீட்டுக்குள் வராது. இந்த பேஸ்ட்டால் எறும்புகள், பூச்சிகள் வருவதற்கு வாய்ப்புள்ளது.
3. உறங்கச் செல்வதற்கு முன்னர் வாழைப்பழத்தை நான்காக வெட்டி அறையின் நான்கு மூலைகளிலும் வைத்தால் நுளம்புகள் இல்லாமல் நிம்மதியான தூக்கத்தை பெறலாம். இனி வரும் காலங்களில் செயற்கையான நுளம்பு விரட்டிகளை கைவிட்டு இந்த முறையை பின்பற்றினால் செலவே இல்லாமல் நுளம்புகளை விரட்டலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |