குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வாழைப்பழ குழிப்பணியாரம்... இப்படி செய்து கொடுத்து பாருங்க
பொதுவாகவே குழந்தைகள் ஸ்னாக்ஸ் சாப்பிடுவதை பெரிதும் விரும்புகின்றனர். இன்னும் சொல்லப்போனால் அதில் குழந்தைகளுக்கு அலாதி இன்பம் என்றே சொல்லலாம்.
ஸ்னாக்ஸ் சாப்பிடுவதில் உள்ள ஆசையால் கடைகளில் விற்பனை செய்யப்படும் இரசாயனம் கலந்த உணவுப்பொருட்களை அதிகமாக குழந்தைகள் நுகர்கின்றனர். அதனால் குழந்தைகளின் ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்படுகின்றது.
எனவே குழந்தைகள் விரும்பும் வகையில் ஆரோக்கியம் நிறைந்த சத்தான வாழைப்பழ குழிப்பணியாரம் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1/4 கப்
வாழைப்பழம் - 2
நாட்டு சர்க்கரை - 1/2கப்
ஏலக்காய்த் தூள் - 1/2 தே.கரண்டி
உப்பு - 1/4 தே.கரண்டி
செய்முறை
முதலில் வாழைப்பழத்தின் தோலை உரித்து சிறு துண்டுகளாக வெட்டி மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் கோதுமை மாவு, அரிசி மாவு, நாட்டு சர்க்கரை, ஏலக்காய்த் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு ஆகியவற்றை சேர்த்து தோசை மாவு போன்று நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அரைத்த மாவினை மூடி போட்டு 10 நிமிடங்கள் வரை நன்றாக ஊற வைக்க வேண்டும்.
பின்னர் அடுப்பில் குழி பணியார கல்லை வைத்து குழிகளில் தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றி அதனை நன்றாக சூடாக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அரைத்து வைத்துள்ள மாவை பணியார குழிகளில் ஊற்றி 2 நிமிடங்களுக்கு மூடி வேகவைக்க வேண்டும்.
இரண்டு நிமிடங்களுக்கு பின்னர் பணியாரங்களை திருப்பி போட்டு மறுபுறமும் நன்றாக வேக வைக்க வேண்டும்.
இரண்டு பக்கங்களும் நன்றாக மொறுமொறுவென்று வெந்ததும் பணியாரங்களை எடுத்து ஒரு தட்டிற்கு மாற்றினால் ஆரோக்கியம் நிறைந்த வாழைப்பழ குழிப்பணியாரம் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |