சொட்டையான இடத்தில் மீண்டும் தலைமுடியை வளர வைக்கணுமா? அப்போ இந்த ஹேர் மாஸ்க் யூஸ் பண்ணுங்க!
பொதுவாக தற்போது இருக்கும் பெண்களுக்கு தலைமுடி உதிர்வு பிரச்சினை அதிகமாக இருக்கின்றது.
இதற்கான முக்கிய காரணங்களில் ஆரோக்கியம் குறைப்பாடும் உள்ளடங்குகின்றன.
தலைமுடி உதிர்வு ஆரம்ப நிலையில் இருக்கும் பொழுதே அதனை கவனம் செலுத்தி உரிய சிகிச்சையை பெற வேண்டும்.
தவறும் பட்சத்தில் நாளடைவில் தலைமுடி உதிர ஆரம்பிக்கும்.இவ்வாறு உதிர்வு அதிகமாகும் பொழுது தலை சொட்டையாகி விடும்.
அந்த வகையில் இப்படி சொட்டையான இடங்களில் எப்படி தலைமுடி உதிர்வை அதிகப்படுத்த வேண்டும் என பலரும் சிந்தித்து கொண்டிருப்பார்கள்.
இது போன்ற நேரங்களில் நாம் வெளியில் மருந்து தேடாமல் வீடுகளில் இலகுவாக கிடைக்கக்கூடிய பொருட்களை தலையில் போட்டு முடியை வளர வைக்கலாம்.
இவ்வாறான ஒரு ஹேர் பேக்கை எப்படி தயாரிப்பது என தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
- வாழைப்பழம் -1
- தேன் - 2 டேபிள் ஸ்பூன்
- ஆலிவ் ஆயில் - தலைக்கு தேவையானளவு
- முட்டை - 1
பேக் தயாரிப்பு முறை
முதலில் நன்கு பழுத்த வாழைப்பழத்தை எடுத்து அதன் தோக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக மசித்து கொள்ளவும்.
வாழைப்பழம் நன்றாக கலவையாக இருக்க வேண்டும். அதிலிருக்கும் கட்டிகளை நன்றாக மசித்து கொள்ளவும்.
வாழைப்பழ பேஸ்ட்டுடன் 1-2 டேபிள் ஸ்பூன் தேனை சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும். அதனை கலந்து கொண்டு ஆலிவ் ஆயிலை சேர்த்து கலந்து கொள்ளவும்.
இறுதியாக அந்த கலவையில் முட்டையை உடைத்து ஊற்றி கலந்து தனியாக வைத்து கொள்ளவும். குளிப்பதற்கு முன்னர் இந்த கலவையை தலையில் தடவி மசாஜ் செய்து கொள்ளவும்.
பின்னர் நன்றாக குளிர்ந்த நீரில் தலையை கழுவினால் சொட்டையாக இருக்கும் இடங்களில் நாளடைவில் தலைமுடி வளர ஆரம்பித்து விடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |