ரொம்ப ஈஸியா வீட்டிலேயே செய்யலாம் வாழைப்பழ கேக்
பொதுவாகவே வீடுகளில் தினமும் சிறியவர் முதல் பெரியவர் வரைக்கும் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் அதிகம் இருக்கிறது. இந்த வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ,பி, பி2,சி போன்ற சத்துக்கள் நிறைந்திருக்கிறது.
இப்படி பல சத்துக்கள் நிறைந்திருக்கும் வாழைப்பழத்தை அதிகம் குழந்தை விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் சில குழந்தை வெறுத்து விடுவார்கள் அப்படி வெறுக்கும் குழந்தைகளுக்கு வாழைப்பழத்தில் கேக் செய்து கொடுத்துப் பாருங்க. ரெசிபி இதோ,
தேவையான பொருட்கள்
மைதா மாவு : ¼ கிலோ
சக்கரைப் பவுடர் : ¼ கிலோ
வெண்ணெய் : 200 கிராம்
வாழைப்பழம் : 8
முந்திரி, உலர் திராட்சை,பாதாம் : 1 கப்
பேக்கிங் பவுடர் : 1 கரண்டி
சமையல் சோடா : 1/2 தேக்கரண்டி
முட்டை : 4
வாழைப்பழ எசன்ஸ் : 1 தேக்கரண்டி
பேக்கிங் சோடா : 1 தேக்கரண்டி
மோர் - 1 கப்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் மற்றும் சக்கரையை சேர்த்து நன்றாக பீட் அடித்துக் கொள்ள வேண்டும்.
பிறகு மிருதுவான பதத்திற்கு வந்ததும் ஒவ்வொரு முட்டையாக சேர்த்து பீட் அடிக்க வேண்டும்.
பிறகு வாழைப்பழத்தை நன்றாக மசித்து அதனுடன் நன்றாக கலக்க வேண்டும்.
பிறகு அதில் மோர், மைதா மா, பேக்கிங் பவுடர், உப்பு, பேக்கிங் சோடா என்பவற்றையும் சேர்த்து நன்றாக அடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
திக்கான பதமாக வந்ததும் அதில் முத்தரி, திராட்சை, பாதாம் என்பவற்றை சேர்த்து பிசைந்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு கேக் ட்ரேயில் வெண்ணெய்யை தடவி அதில் தயார் செய்த கலவையை உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் வைத்துக் கொள்ளவும்.
பின்னர் மைக்ரோவேவ் அவனில் வைத்து 180 டிகிரியில் ப்ரீ ஹீட் வைத்து 40 நிமிடத்திற்கு வேக வைக்க வேண்டும். பின்னர் கேக் சரியாக வந்திருக்கிறதா என சரிபார்த்து விட்டு ஆறவைத்து துண்டுகளா வெட்டி பரிமாறலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |