வாழைப்பழ பிரெட் டோஸ்ட் செய்து சாப்பிட்டு இருக்கீங்களா? இந்த ரெசிபியில் செய்து பாருங்க!
பொதுவாக குழந்தைகள் கடினமான உணவுகளை விரும்பவதில்லை. இதனால் தினமும் அவர்களுக்கு இட்லி, தோசை, உப்புமா என கொடுத்தால் சாப்பிடமாட்டார்கள். இவற்றையெல்லாம் தாண்டி வாழைப்பழத்தை வைத்து பிரட் டோஸ்ட் செய்யலாம்.
இதனை கண்டிப்பாக வீடுகளில் இருக்கும் சிறுவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.
அப்படி என்ன வாழைப்பழ பிரட் டோஸ்ட்டில் இருக்கின்றது? அது எப்படி ஈஸியாக செய்யலாம்? என தொடர்ந்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- பிரட் துண்டுகள்- 1
- வாழைப்பழம்- 2
- முட்டை- 1
- சர்க்கரை- 4 ஸ்ப்பூன்
- தேங்காய்துருவல்- ஒரு கப்
பிரட் டோஸ்ட் செய்முறை:
வாழைப்பழங்களை எடுத்து தோல் நீக்கி அதனை வட்டமாக வெட்டி வைக்கவும். பின்னர் முட்டை, சர்க்கரை, 5 ஸ்பூன் பால் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அடித்து கலக்கி கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து அதில் ஒரு ஸ்பூன் நெய்விட்டு காய்ந்ததும் அதில் வாழைப்பழ துண்டுகள் மற்றும் அதன்மேல் சர்க்கரை, தேங்காய் துருவல்களை தூவி பிரட்டி எடுக்க வேண்டும்.
இதனை தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு பிரட் துண்டுகளை எடுத்து அதன் ஓரங்களை வெட்டி விட்டு அதனை சப்பாத்தி தேய்க்கும் கட்டையால் பிரட்டுகளை தட்டையாக தேய்த்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதன் நடுவே வாழைப்பழங்களை வைத்து ரோல் செய்ய வேண்டும். இவ்வாறு அனைத்து ரோல்களையும் செய்து அடுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் தோசை தவாவை அடுப்பில் வைத்து அதில் நெய் விட்டு காயந்ததும் இந்த பிரட் ரோல்களை எடுத்து முட்டை கலவையில் முன்னும் பின்னுமாக புரட்டி எடுத்து தோசை தவாவில் சேர்க்க வேண்டும்.
இதனை திருப்பி திருப்பி போட்டு டோஸ்ட் செய்து எடுக்க வேண்டும். அருமையான வாழைப்பழ பிரட் டோஸ்ட் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |