கருமை படிந்த முகமா உங்களுக்கு? வாழைப்பழத்தை இப்படி பயன்படுத்துங்க
பொதுவாக பழங்கள் என்றாலே அனைத்து வயதினரும் விரும்பி உண்பார்கள். அதிலும் மிகவும் எளிதாக கிடைக்கும் வாழைப்பழத்தினை விரும்பி சாப்பிடாதவர்கள் இருக்கவே முடியாது என்று தான் கூற வேண்டும்.
முக்கனிகளில் ஒன்றாக இருக்கும் வாழைப்பழத்தில் ஏராளமான சத்துக்கள் நிரம்பியுள்ளதுடன், பல நன்மைகளையும் நமக்கு அளிக்கின்றது.
வாழைப்பழங்களில் நம் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி6, பொட்டாசியம் மற்றும் மாங்கனீஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. வாழைப்பழத்தினைக் கொண்டு முகத்தின் அழகை எவ்வாறு மேம்படுத்துவது என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
அழகை அதிகரிக்கும் வாழைப்பழம்
சருமம் ஜொலிக்க வாழைப்பழத்துடன் சிறிது கெட்டி தயிர் மற்றும் தேன், ஓட்ஸ் மாவு இவைகள் அனைத்தையும் கலந்து நாம் குளிப்பதற்கு ஒரு அரை மணி நேரம் முன்பு இதை உடம்பு, கை, கால், கழுத்து பகுதிகளில் தடவி குளித்தால் சருமம் சிவப்பாகும்.
பழுத்த வாழைப்பழம் ஒன்றினை எடுத்து நன்றாக பிசைந்து கொள்ளவும். அதில் காய்ச்சாத பால் 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து முகத்தில் கருமை படிந்த இடத்தில் தடவுங்கள். இவ்வாறு செய்வதால் முகத்தில் உள்ள கருமை நீங்கும்.
நன்கு பழுத்த வாழைப்பழத்தை பிசைந்து அதில் இரண்டு சொட்டு எலுமிச்சைச் சாறு மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு கலந்து முகத்தில் பூசி காய்ந்த பிறகு கழுவிவிடுங்கள். இவ்வாறு செய்வதால் தோலின் கருமை மற்றும் கண்களைச் சுற்றியுள்ள கரு வளையமும் நீங்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |