ரிவியில் நொறுக்கு தீனி விளம்பரங்களுக்கு தடை: எதற்காக தெரியுமா?
நொறுக்கு தீனிகளில் சுவை கூட்டும் பொருட்களாலும், கெட்டுப்போகாமல் இருப்பதற்காக சேர்க்கப்படும் ரசாயனங்களாலும் உடல் நலத்துக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.
இத்துடன் பலருக்கு தேவையற்ற சதைகள் உருவாகி உடல் குண்டாகி விடுகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு உடல் பருமன் மிக அதிகமாகி விடுகிறது.
அந்த வகையில் இங்கிலாந்தில் 4 வயதில் இருந்து 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 10 சதவீதம் பேரும் 10 வயது குழந்தைகள் 20 சதவீதம் பேரும் குண்டாகி உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதை தடுப்பதற்கு இங்கிலாந்து அரசு சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. உடல் குண்டாவதற்கு இவை காரணமாக இருப்பதாக இது சம்பந்தமான விளம்பரங்களை டி.வி.க்களில் ஒளிபரப்ப கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த விளம்பரங்களை இனி இரவு 9 மணி வரை ஒளிபரப்பு செய்யக்கூடாது என்று இங்கிலாந்து சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.