பலூன் விற்ற பெண்: வைரலான ஒற்றை புகைப்படம்! மொடலாக மாறிய தருணம்
இந்தியாவைச் சேர்ந்த பலூன் விற்ற பெண் ஒருவர் ஒரே ஒரு புகைப்படத்தால் பிரபல மாடல் ஆகியுள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சமூக வலைத்தளங்களை பயனுள்ள வகையில் கையாளுபவர்கள், அதன் மூலம் தங்களின் தனித்திறன்களை வெளிப்படுத்தி உரிய அங்கீகாரம் பெற்று விடுகிறார்கள். ஒரே நாளில் உலகறிந்த பிரபலமாக மாறியும் விடுகிறார்கள்.
அந்த வகையில் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி மம்மிக்கா(60) ஒரே இரவில் உலகப்புகழ் பெற்றார்.
பலூன் விற்ற பெண்
இதுபோல் கடந்த ஜனவரி 17-ஆம் தேதி கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் ஆண்டலூர் காவு திருவிழாவில் கிஸ்பு என்ற இளம் பெண் பலூன் விற்பதைக் கண்ட புகைப்பட கலைஞர் அர்ஜுன் கிருஷ்ணன்.
அவரது அலாதியான நேர்த்தியைக் கண்டு தனது கேமராவில் படம் எடுத்தார். அதில் ஒன்றை அவர் பின்னர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். இதற்குக் கிடைத்த வரவேற்பு எதிர்பாராதது.
புகைப்படம் ஆன்லைனில் விரைவாக வைரலாகி, கிஸ்பு ஒரு போட்டோஷூட்டில் நடிக்க வழிவகுத்தது. தற்போது அது இணையத்தைக் வைரலாக்கி உள்ளது.
புகைப்படம் வைரலானதும் கிஸ்பு தனது குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள வழிவகுத்தது.கிஸ்புவின் குடும்பத்தினர் போட்டோ ஷூட்டிற்கு சம்மதித்த பிறகு, ஒப்பனை கலைஞர் ரம்யா பிரஜூல் அவருக்கு ஒப்பனை செய்தார்.
கிஸ்பு பாரம்பரிய புடவையில் தங்க நகைகளுடன் அலங்கரிக்கப்பட்டார். அந்த புகைப்படங்கள் அர்ஜுன் கிருஷ்ணன் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டது. அது அமோக வரவேற்பைப் பெற்று உள்ளது.