viral video: இரட்டை தலையுடன் இருக்கும் பந்து மலைப்பாம்பு! புல்லரிக்கும் காட்சி
இரண்டு தலையுடன் பிறந்த பந்து மலைப்பாம்பின் மெய்சிலிர்க்க வைக்கும் காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே பெரும்டபாலான மக்கள் செல்லப்பிராணிகளை அதன் குணாதிசயங்களை அடிப்படையாக கொண்டே வளர்க்கின்றனர். நாய், பூனை, மீன், கோழிகளைத்தான் அதிகமாக செல்லப்பிராணிகளாக வளர்க்கின்றனர்.
ஆனால் சில நாடுகளில் பாம்புகளையும் வளர்க்கின்றனர். அப்படி பாம்பு வகைளில் மிகவும் பிரபல்யமான செல்லப்பிராணியாக அறியப்படுவது தான் இந்த பந்து மலைப்பாம்பு.
இது இயல்பாகவே மனிதர்களுடன் விரைவில் பழகும் குணம் கொண்டதாக அறியப்படுகின்றது. இந்த வகை பாம்புகள் எதிரிகளிடமிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள தன் உடலை பந்து போல் மாற்றிக்கொள்ளும் இயல்பை கொண்டுள்ளதாலேயே இதற்கு பந்து மலைப்பாம்பு என பெயர் வந்துள்ளது.
இவ்வளவு சிறப்பம்சங்கள் கொண்ட பந்து மலைப்பாம்பொன்று இரண்டு தலையுடன் பிறந்திருக்கும் அரிய காட்சியடங்களி காணொளி தற்போது இணையத்தில் பெரும்பாலானவர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
