வழுக்கை தலையில் மீன் தொட்டியா? முதியவர் தலையில் இளைஞர் செய்த சாகசம்
வழுக்கை தலையில் மீன் தொட்டி அமைத்து, மீன்களுக்கு உணவு போடும் காணொளி இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.
சமூக வலைத்தளங்களை பொறுத்த வரையில் பிரபலமாவதற்காக பலரும் போட்டி போட்டு தங்களின் திறமைகளை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படி ஒருவர் போட்ட காணொளி இணையவாசிகளை நகைப்பிற்குள்ளாகியுள்ளது.
இப்படியொரு மீன் தொட்டியா?
அதாவது நாம் சிலரை வழுக்கை தலையுடன் இருப்பதை பார்த்தால் கலாய்ப்பதற்காக மைதானம் என்றெல்லாம் கூறுவது வழமை. ஆனால் உண்மையில் வழுக்கை தலையுடன் உள்ள முதியவர் தலையில் மீன் தொட்டி அமைக்கும் காணொளியொன்று தற்போது வைரலாக்கப்பட்டு வருகிறது.

குறித்த காணொளியில் முதியவர் ஒருவர் அமரந்திருக்கிறார், அவருடைய தலையில் பெரிதாக முடிகள் இல்லை. அப்போது ஒருவர் தலையை சுற்றி பொலித்தீன் கவரால் சுற்றி விட்டு, இரண்டு செடிகள் வைத்து, அதில் கற்களையும் வைத்து, தொட்டி போன்று அமைத்து தண்ணீர் ஊற்றுகிறார்.
அதன் பின்னர் இரண்டு மீன்களை தொட்டிக்குள் போட்டு, அவை நீந்தும் அழகை பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக உள்ளது.
இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
காணொளியை இங்கு அழுத்திப் பார்க்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |