ரூல்ஸை பிரேக் செய்த பாலாஜி... கிழித்து தொங்க விட்ட ரசிகர்கள்! இனிமே.... அதிரடி ஆட்டம் ஆரம்பம்
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ரூல்சை மீறும் பாலாஜி முருகதாஸை ரசிகர்கள் கிழித்து தொங்க விட்டு வருகின்றனர்.
பாலாஜி முருகதாஸ் சீசன் 4ல் ஏகப்பட்ட ரூல்ஸ் பிரேக் செய்தார்.
சனம் ஷெட்டியுடன் அவருக்கு நடந்த அந்தவொரு பிரச்சனை காரணமாக ஏகப்பட்ட பேர் ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்றெல்லாம் கொந்தளித்தனர்.
ஆனால், கடைசியாக ரன்னர் அப் ஆகி வெளியேறினார். இந்நிலையில், இந்த பிக் பாஸ் அல்டிமேட்டில் வீட்டிற்குள் நுழைந்ததுமே ரூல்ஸ் பிரேக் செய்தார் பாலாஜி முருகதாஸ்.

முதல் நாளிலேயே பாலாஜி முருகதாஸ் ரூல்ஸ் மீறியது ரசிகர்களை கொந்தளிக்க செய்துள்ளது.
ரெஸ்ட்ரிடட் ஏரியா என போர்டு போடப்பட்டு மாஸ்டர் பெட்ரூம் ஒன்று தனியாக அமைக்கப்பட்டிருந்தது. வனிதா, நிரூப் உள்ளிட்டோர் அதை பார்த்து அதற்குள் செல்லாமல் இருந்த நிலையில், பாலாஜி முருகதாஸ் வந்த உடனே அதற்குள் சென்று அங்கிருந்த பெட்டில் படுத்து புரண்டார்.

பாலா தனது வேலையை ஆரம்பிச்சிட்டான்பா என ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பிக் பாஸ் அல்டிமேட்டில் பிசிக்கல் டாஸ்க்கில் நிரூப்புக்கும் பாலாவுக்கும் இடையே தான் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.
4வது சீசனில் ரன்னர் அப் ஆன பாலாஜி முருகதாஸ் இந்த முறை டைட்டிலை ஜெயிப்பார் என ஏகப்பட்ட பாலா ஆர்மியினர் கமெண்ட் செய்து வருகின்றனர். பாலாவின் ஆட்டம் இதே போல தினமும் அதிரடியாக இருக்கும் என்றே எதிர்பார்க்கின்றனர்.