பாலாவின் முன்னாள் மனைவிக்கு பிரபலத்துடன் காதல்! வெளியான நெருக்கமான புகைப்படம்
பிரபல நடிகரான பாலாவின் முன்னாள் மனைவியான அம்ருதா சுரேஷ், கேரள இசையமைப்பாளருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
காதல் மனைவியுடன் விவாகரத்து
தமிழில் அன்பு படத்தின் மூலம் அறிமுகமான பாலா, வீரம் படத்தில் அஜித்தின் தம்பதியாக நடித்து அசத்தினார்.
இவருக்கும், அம்ருதா சுரேஷ் என்பவருக்கும் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடந்தது, இவர்களுக்கு அவந்திகா என்ற மகள் இருக்கிறார்.
இந்நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 2019ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.
தொடர்ந்து பாலா, எலிசபெத் என்பவரை திருமணம் செய்து கொண்டார், அம்ருதாவும் கேரள இசையமைப்பாளரான கோபி சுந்தருடன் நெருக்கம் காட்டுவதாக தகவல்கள் வெளியானது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக, இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அம்ருதா ”என்னுடையது” என குறிப்பிட்டார்.

பாலாவின் பதில் என்ன?
இந்நிலையில் இதுகுறித்து ரசிகர் ஒருவர் பாலாவிடம் கேள்வி கேட்க, மனைவி எலிசபெத்துடன் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் கூட புதிய வீடு ஒன்றை வாங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அம்ருதா சுரேஷின் காதல் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றும், அவர் மகிழ்ச்சியாக இருக்க பிரார்த்தனை செய்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
