ஆரி எப்படிப்பட்டவர் தெரியுமா? ரியோவுக்கு சப்போர்ட் பண்ணுங்க! ரசிகருக்கு ரியோவின் மனைவி கொடுத்த பதிலடி
ரியோவின் மனைவி ஆரி பற்றி கூறிய பதிவு தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. நேற்று அவர் ஒரு பதிவை பதிவிட்டிருந்தார். அதில் அவர் கூறும்போது "ரியோவை அவமானப்படுத்தும் விதத்தில் சில கமெண்டுகளில் அவரை கோமாளி என்று அழைப்பதை பார்த்தேன்.
எனக்கு மிகவும் சந்தோஷம் தான். தன்னுடைய கவலைகளை மறைத்து மற்றவர்களை சிரிக்க வைப்பதற்காக போராடும் ஒருவரை நான் நேசிக்கிறேன் என்பது எனக்கு பெருமையை. நீ கோமாளியாவே இரு என்று கூறியிருந்தார்.
அப்போது ரசிகர் ஒருவர் அந்த பதிவிற்கு கீழே "ஆமாம் ரியோ சிறந்தவர் தான், அந்த பொய்யான ஆரியை விட" என்று கூறியிருந்தார். அதற்கு பதிலளித்துள்ள ஸ்ருதி "ரியாவுக்கு ஆதரவு கொடுங்கள். ஆனால் மற்ற எந்த போட்டியாளரையும் இங்கே குறைவாக பேச வேண்டாம்.
ஆரி அண்ணாவும் ஒரு சிறந்த மனிதர். பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றபோது அதை பார்த்தேன். எல்லாரும் அவர்கள் விளையாட்டைதான் விளையாடுகிறார்கள்" என்று கூறியுள்ளார்.
I see some comments that try to defame him by saying comali. I’m actually glad! I’m proud to love someone who does his best to make others laugh even while hiding his pain! You shine beyond hatred my dear! Remain a comali. Be an inspiration! #weloverio pic.twitter.com/kq0VyeBnrQ
— sruthi ravi (@sruthi137) January 5, 2021