வெளியேறும் முன் சிங்கப்பெண்ணாக மாறிய ஷிவானி! விட்டு கொடுக்காத ரம்யா? ராயல் சல்யூட் அடித்த ஹவுஸ்மேட்கள்
இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஷிவானி நாராயணனுக்கும், ரம்யா பாண்டியனுக்கும் இடையே கடுமையான போட்டி இடம்பெற்றது. கடைசி வரை போராடும் ஷிவானி மற்றும் ரம்யா பாண்டியனுக்கு ஹவுஸ்மேட்கள் ராயல் சல்யூட் அடித்தது போலவே பிக் பாஸ் ரசிகர்களும் சல்யூட் செய்து வருகின்றனர்.
ஷிவானி நாராயணனும், ரம்யா பாண்டியனும் கடைசி வரை கயிற்றை விடாமல் பிடித்துக் கொண்டு இருக்கும் காட்சிக்கு உடனே பிக் பாஸ் எடிட்டர் பிகில் படத்தில் இடம்பெற்ற சிங்கப்பெண்ணே பாடலை பிஜிஎம்மாக போட்டுள்ளார்.
மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் ஷிவானி என இத்தனை நாட்களாக அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தற்போது தொடர்ந்து எல்லா டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கிலும் தனியாக ஷிவானி சிறப்பாக கேம் ஆடி தனது தனித்துவத்தை வெளிப்படுத்தி வருவது பார்க்க நல்லா இருக்கு என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இந்த இருவரில் ஒருவர் தான் இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற போகிறார்கள் என்றும் நெட்டிசன்கள் கணித்து வருகின்றனர்.
எப்படியோ நாளைக்கு காலையிலேயே இந்த வாரம் சிங்கிள் எவிக்ஷனா? டபுள் எவிக்ஷனா? யார் வெளியே போனாங்கன்னு எல்லாமே லீக் ஆகிடும், அடுத்த வாரம் ஷோவும் சிறப்பாக முடிந்துவிடும். பொருத்திருந்து பார்ப்போம்.