பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஆஜீத்திற்கு அவரது குடும்பம் கொடுத்த சர்ப்ரைஸ்! நெகிழ வைக்கும் காட்சி
பிக்பாஸ் வீட்டிலிருந்து கடந்த வாரம் ஆஜீத் வெளியேற்றப்பட்டார். திருச்சியைச் சேர்ந்த இவர் பிரபல ரிவியில் 2011ம் ஆண்டு ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜுனியர்ஸ் 3ல் கலந்து கொண்டு டைட்டிலை வென்றார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் 2014 ஆம் ஆண்டு திக்கி தெணறது தேவதை (Thikki Thenarudhu Devatha) என்ற ஆல்பம் பாடலை பாடி இருந்தார்.
இந்நிலையில் தான் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறும் வாய்ப்பும் கிடைத்தது. இந்நிகழ்ச்சியில் இவர் மூன்றாவது வாரமே வெளியேற்றப்பட்டார். ஆனால், அப்போது இவருக்கு கிடைத்திருந்த Eviction Free Pass மூலம் தப்பித்துவிட்டார்.
அதன் பின்னர் இவர் ஒரு சில வாரங்களில் நாமினேஷனில் இடம்பெற்றாலும் அந்த வாரம் இவரை விட மக்களை வெறுப்பேற்றிய போட்டியாளர்கள் மீது கவனம் போனதால் இவர் எலிமினேஷனிலிருந்து தப்பித்துவிட்டார்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஆஜீத் நேற்றைய தினத்தில் காணொளி ஒன்றினை வெளியிட்டிருந்தார். மேலும் ஆஜீத்தை அவரது வீட்டில் வரவேற்ற காணொளி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.