குடும்ப பெண்ணாக வரும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகையா இது? மாடர்ன் உடையில் அசத்தல் புகைப்படம்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம், குடும்பத்தை சுமக்கும் குடும்பதலைவிகளின் கதையை அழகாக விவரிக்கும் சீரியலே பாக்கியலட்சுமி.
கண்டிப்பான கணவர், அத்தை, பாசமான பிள்ளைகள், அக்கறையான மருமகள் என அனைத்து உறவுகளையும் சுமந்து வாழும் அன்பான தலைவி, தன்னுடைய கனவிலும் எப்படி ஜெயிக்கிறார் என்பதே கதை.
இந்த சீரியிலில் மருமகளான நடித்து வருபவர் திவ்யா ( ஜெனி), கேளடி கண்மனி சீரியல் மூலம் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தவர் சுமங்கலி, மகராசி சீரியலிலும் நடித்துள்ளார்.
சட்டம் படிக்க சென்னை வந்த திவ்யாவுக்கு, எதிர்பாராதவிதமாக சீரியலில் வாய்ப்பு கிடைத்ததும் நடிப்பில் கலக்கி வருகிறார்.
தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்க வேண்டும் என்பதே திவ்யாவின் ஆசையாம், எப்போதும் சேலையில் கலக்கும் திவ்யாவின் மாடர்ன் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
திவ்யா இவ்ளோ அழகா!!! என ரசிகர்கள் வாய்பிளந்துள்ளனர்.