கிழிந்த பேண்டுடன் பாக்கியலட்சுமியின் மருமகள்! வைரலாகும் புகைப்படங்கள்
பாக்கியலட்சுமி சீரியலில் மருமகளாக அசத்தி வரும் திவ்யா கணேஷ் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
பாக்கியலட்சுமி தொடரில் ஜெனியாக அசத்தி வருகிறார் திவ்யா கணேஷ்.
ராமநாதபுரத்தை சேர்ந்த இவர் விஜெவாக தனது பயணத்தை தொடர்ந்தார், அப்போதே சீரியலில் வாய்ப்புகள் வர, சின்னத்திரை நடிகையானார்.
புதுமணம் சீரியலில் வாய்ப்பை தொடங்கி, லட்சுமி வந்தாச்சு, சுமங்கலி, கேளடி கண்மணி என தொடர்ந்து பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வருகிறார்.
இதில் மிகவும் சாந்தமான மருமகளாக இவரது கதாபாத்திரம் பலரையும் கவர்ந்துள்ளது என்றே கூறலாம்.
இதுபோன்று அல்லவா மருமகள் இருக்க வேண்டும்? என்றெல்லாம் புகழாரம் சூட்டி வருகின்றனர்.
சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக உள்ள திவ்யா கணேஷ் அவ்வப்போது புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்.
அந்தவகையில் தற்போது மாடர்ன் உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
அதில் கிழிந்த பேண்டுடன் இருக்குறீங்க? வீட்டில எலி தொல்லையா? என்றெல்லாம் கமெண்ட் அடித்து வருகின்றனர் அவரது ரசிகர்கள்.