17 வயது இளைஞருக்கு 71 வயது பாட்டி மீது வந்த காதல்....7 வருடங்களாக சேர்ந்து வாழும் ஆச்சரியம்!
சிறு வயது நபர் 58 வயது அதிகம் உள்ள பெண்ணை காதலித்து கிட்டத்தட்ட 7 வருடங்களாக ஒன்றாக இருந்து வருகின்றனர்.
அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தை சேர்ந்த 24 வயது இளைஞர் கேரி 77 வயதான மூதாட்டி அமெல்டா இருவரும் காதலித்து கேரிக்கு 17 வயதாக இருந்த போதும், அமெல்டாவுக்கு 71 வயதாக இருந்த போதும் 2015-ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டனர்.
2015-ம் ஆண்டு அமெல்டாவின் மகன் இறந்து போகவே, அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட கேரியுடன் அறிமுகமாகி பின்னர் இரண்டு வாரங்களிலேயே இருவரும் காதலை பறிமாறி திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்.
புரணி பேசுவது அல்லது ஏச்சுப் பேச்சு பேசுவது என்பது அங்கு மட்டும் இருக்காதா என்ன? இந்த ஜோடிக்கு ஆரம்பத்தில் பலரும் பல வகைகளில் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
அவற்றை எல்லாம் மீறி தங்கள் காதல் மீது கொண்ட நம்பிக்கையால் தொடர்ந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர் இந்த தம்பதி.
காதலர் தினத்தன்று உலகிலேயே சிறந்த மனைவி என அல்மெடாவை புகழ்ந்து கேரி போட்ட இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது வைரலாகி வருகிறாது 43 வருடங்களுக்கு முன்பு அல்மெடாவிற்கு, முதல் கணவரான டொனால்டாவிற்கும் திருமணம் நடந்துள்ளது.
2013ம் ஆண்டு முதல் கணவர் உயிரிழந்த நிலையில், மூத்த மகனுடன் வசித்து வந்துள்ளார்.
அவரும் 2015ம் ஆண்டு வலிப்பு நோயால் இறந்துவிட அல்மெடா மனமுடைந்து போயுள்ளார்.
அந்த சமயத்தில் தனக்கு ஆறுதலாகவும், பலமாகவும் அமைந்த ஆத்ம துணை தான் கேரி என்றும், அவரை பார்த்ததுமே தனக்கு அது தெரிந்துவிட்டதாகவும் உணர்ச்சி பெருக்குடன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
