பரபரப்பான திருப்பங்களுடன் பாரதி கண்ணம்மா? தூக்குங்க டா அந்த பேக்க... வெண்பா பகிர்ந்த புகைப்படம்.. ஒருவேளை அதுவா இருக்குமோ?
விஜய் டிவியில் தற்போது மிகவும் வைரலாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர் பாரதி கண்ணம்மா.
தற்போது இந்த தொடரில் மிகவும் பரபரப்பான திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், தற்போதய கதை சுருக்கம் என்னவென்றால் பாரதி மற்றும் கண்ணம்மா-வின் குழந்தை கடத்தப்படுகிறாள், மற்றும் அந்த பழி கண்ணம்மாவின் மேல் விழுகிறது. சௌந்தர்யா அவரை ஜாமீனில் எடுக்கிறார்.
இந்நிலையில், அதே தொடரில், வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஃபரீனா, ஷுட்டிங்கின் போது எடுத்த புகைப்படம் ஒன்றை தனது INSTAGRAM பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில், கண்ணம்மா தலையில் கட்டு ஒன்றைப் போட்டுக் கொண்டு, தனது மாமியாருடன் நிற்கும் நிலையில், 'மறுபடியும் போட்டுட்டா டா கட்ட, தூக்குங்க டா அந்த பேக்க' என பரீனா குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே, முந்தைய எபிசோட் ஒன்றில் கண்ணம்மா பை ஒன்றுடன் கோபத்துடன் நடந்து செல்லும் புகைப்படம் மற்றும் வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி இருந்தது.
அதனைக் குறிப்பிட்டு, ஃபரீனா வின் இந்த பதிவு நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வரவேற்பை பெற்று வருகிறது.